ஓ காட்.. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி... மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாதாம்!
சென்னை: ஆடி அமாவாசை, குரு பெயர்ச்சி, ஆடி பதினெட்டு ஆகிய மூன்று பண்டிகைகளும் ஒரு சேர வந்துள்ளதால் மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாது எனவும் ஒரே வீட்டில் இன்றைய தினம் இருவரும் இருக்கக் கூடாது எனவும் வதந்தி பரவியதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நம் ஊரில் வதந்திகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை. தங்கைகளுக்கு அண்ணன்கள் பச்சை சீலை எடுத்து தரவேண்டும் என்ற வதந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு பரவியது.

சமீபத்தில் பிரபல கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி இறங்கியதாக பரவிய வதந்தியால், கணவருக்கு ஆகாது என்று அச்சப்பட்ட பெண்கள் தங்களின் வீட்டு வாசல்களில் விளக்கேற்றி பரிகாரம் செய்தனர்.
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, குருப்பெயர்ச்சயை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடிப்பெருக்கை கொண்டாட வந்த புதுமணத் தம்பதிகளும், ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களும், குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரப் பூஜை செய்ய வந்தவர்களும் என நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டனர்.
இந்த நிலையில், பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஏராளமான பெண்கள் திரண்டுள்ளனர். இவர்கள் திங்கட்கிழமை இரவு 12 மணி முதலே கோயிலில் தங்கியுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு வதந்தி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆடி அமாவாசை, குருபெயர்ச்சி, ஆடி பதினெட்டு இவை மூன்றும் ஒரு சேர வந்துள்ளதால் மாமியார் முகத்தில் மருமகள் முழிக்கக் கூடாது எனவும் ஒரே வீட்டில் இன்றைய தினம் இருவரும் இருக்கக் கூடாது எனவும் வதந்தி பரவவே, பண்ருட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் இரவு 12 மணி முதல் முகாமிட்டனர்.
மேல்மருவத்தூர், மேல்மலையனூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கும் பெண்கள் படையெடுத்தனர். நள்ளிரவு 12 மணி வரை கோயில்களிலேயே தங்கியிருந்து, நாளை விடியற்காலையில் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
பச்சை புடவை, மஞ்சள் புடவை, சிவப்பு புடவை என்று வதந்தி கிளப்பியவர்கள் இப்போது மாமியார் முகத்தில் மருமகள் விழிக்கக் கூடாது என்று புரளி கிளப்பி விட்டுள்ளனர். இந்த புரளியைக் கிளப்பியது யார் என்பதும், எப்படி பரவியது என்பதுதான் புரியாத புரியாக உள்ளது.
-
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
குருப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு என்ன பலன்?.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications