"டீச்சர்.. ஐ லவ் யூ".. பள்ளி மாணவன் கொடுத்த லவ் டார்ச்சர்.. ஒரே நாளில் 160 போன்!
பள்ளி ஆசிரியைக்கு மாணவன் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறான்.
வேலூர்: இந்த கொடுமையை கேட்டீங்களா??? தன் வகுப்பு டீச்சருக்கே ஐ லவ் யூ சொல்லி இருக்கான் பள்ளி மாணவன் ஒருவன்!!
'ஐ லவ் யூ' என்ற வார்த்தையை சொல்லவே தயக்கமாகவும், வெட்கப்பட்ட காலம் முன்பு இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் சகஜமான வார்த்தையாக ஒன்றாகிவிட்டதுபோய், அதை பாடம் சொல்லி தரும் டீச்சருக்கே சொல்லும் அவலம் வந்துவிட்டது.
வேலூர் மாவட்டம் கல்லப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வழக்கம்போல் பிளஸ்டூ வகுப்பு ஒன்றில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஆனால் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனிக்காத மாணவன் ஒருவன், தன்னுடைய செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளான்.

கல்வி அதிகாரிகள்
இப்படி ஆபாச படம் பார்த்து கொண்டிருப்பதை பார்த்த மற்ற மாணவர்கள் உடனே ஆசிரியரிடம் இதை பற்றி சொன்னார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், மாணவனை அழைத்து விசாரித்தார். உடனே மாணவனும், தான் ஆபாச படம் பார்த்ததை ஒப்பு கொண்டான். இதையடுத்து வகுப்பறையிலேயே, ஆசிரியர் இருக்கும்போதே இப்படி ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் மாணவன் ஆபாச படம் பார்த்தது உண்மைதான் என்பது உறுதி செய்யப்பட்டது.

ஹாபி... ஜாலி..
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த மாணவன் தன் பள்ளி மாணவிகளை பல்வேறு கோணங்களில் ஆபாசமாக செல்போனில் படம் பிடித்துள்ளது தெரியவந்தது. இந்த மாணவன் சக மாணவிகளை செல்போனில் படம் பிடிப்பதும், அதை மாணவர்கள் மத்தியில் பரவ விடுவதும் அவனுக்கு ஒரு ஜாலியாம், அது ஒரு ஹாபியாம். மாணவிகளை இப்படி அசிங்க அசிங்கமாக படம் பிடிப்பதுடன், தன் இஷ்டத்துக்கு உடன்படுமாறு அவர்களை மிரட்டுவது வேறு நடந்திருக்கிறது. இது சமாச்சாரம் தலைமை ஆசிரியருக்கும் கொண்டு போகப்பட்டது. ஆனால் அவர் அப்போதைக்கு ஏதோ திட்டி, போய் எல்லாரும் வேலையை பாருங்க என்று விரட்டி விட்டு இருக்கிறார்.

ஷாக்கிங்
இது எல்லாத்தையும் ஷாக் நியூஸ் என்னவென்றால், இந்த மாணவன், தன் ஆசிரியையிடம், லவ் டார்ச்சர் கொடுத்திருக்கிறான். "டீச்சர் உங்க செல் நம்பர் தாங்கேளேன், அடிக்கடி பேசலாம்" என்று டீச்சர் பின்னாலேயே தொந்தரவு செய்து அமர்க்களம் செய்துள்ளான். கடைசியில் நம்பரை தெரிந்து கொண்டு, திருமணமாகாத அந்த டீச்சருக்கு ஒரே இரவில் 160 தடவை போன் செய்திருக்கிறான் இந்த மாணவன். அதனால் அந்த டீச்சர் இவன் தொல்லை தாங்காமல் தன் செல்போன் நம்பரையே மாற்றிவிட்டிருக்கிறார். இந்த விவரமெல்லாம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இந்த மாணவன் மீது எது போன்ற நடவடிக்க மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

குட்டிச்சுவராகின்றனர்
மாணவன் மீது நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி இளைய சமுதாயம் கெட்டு சீர்கெட்டு போவதற்கு முக்கிய காரணம் இணையதளங்களும், மீடியாவும்தான் என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இந்த இரண்டுமே பெரும்பாலானவர்களை கெட்டு குட்டிச்சுவராக்கி கொண்டு வருகிறது. இப்போதெல்லாம் நல்ல எடுத்துக்காட்டுகளும் எழுச்சிமிக்க ஊக்குவிப்புகளும் மாணவர்களுக்கு இல்லாமல் இருப்பது ஒருபக்கம் வேதனை அளிக்கிறது என்றால், கெடுப்பதற்கும் சிதைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

மீடியாக்கும் உண்டு
பெற்றோர்களின் கண்காணிப்புடன்கூடிய வளர்ப்பு, ஆசிரியர்களின் வழிநடத்துதல், வளரும் சூழல் போன்றவையே ஒரு மாணவனின் குணாதிசயத்தை தீர்மானிக்கின்றன. எனவே இளைய தலைமுறையை பக்குவப்படுத்தி, நல்வாழ்விற்கு பொருந்தும் வகையில் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மட்டுமல்ல, மீடியாக்களுக்கும் கண்டிப்பாகவே உண்டு.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications