திருவள்ளூர் குடியிருப்பு பகுதியில் பீதியை கிளப்பிய குட்டி விமானம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் சாலையில் நின்றிருந்த சிறிய ரக விமானத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த தேவி மீனாட்சி நகரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று வந்து நின்றது.
இதை கண்ட பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.
அப்போது பச்சை நிறத்தில் மூன்று சக்கரங்களுடன் சிறிய ரக விமானம் நிற்பதை கண்டனர். விமானத்தின் அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெயர் மோகன் 30 என்பதும், ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பை முடித்து பெங்களூரில் உள்ள விமான உதிரி பாகங்கள் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லுாரி மாணவர்களுக்காக சிறிய ரக விமானத்தை தயார் செய்ததும் தெரிய வந்தது. இதை அறிந்த பின் போலீசார் நிம்மதியுடன் சென்றனர். தகவலறிந்த அப்பகுதிவாசிகள் வியப்புடன் சிறிய ரக விமானத்தை பார்த்து சென்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications