Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படி போடுங்க.. தமிழ்நாட்டின் ஒரு குட்டி நகரத்திற்கு.. சீறிப்பாய போகும் வந்தே பாரத்.. ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: தமிழ்நாட்டில் ஒரு சிறிய நகரம் வேகமாக முன்னேறி வருகிறது.. தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

மன்னார்குடி இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். அங்கே அடுத்தடுத்து பல மாற்றங்கள், முன்னேற்ற நடவடிக்கைகள் மின்னும் மண்ணை திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது மன்னார்குடியை நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. ஏன் இங்கே வந்தே பாரத் இயக்கப்படுகிறது? அதற்கு காரணம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

sipcot

வேகமான வளர்ச்சி காரணம் 1: திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மன்னார்குடி வேகமாக வளர தொடங்கி உள்ளது. இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அங்கே தற்போது பாதாள சாக்கடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மன்னார்குடி பாதாள சாக்கடை திட்டம் 299 கோடிகள், 125 கீ மீ தூரம்... பணிகள் நடைபெற்று கொண்டு உள்ளது .. 1975 ஆம் ஆண்டு 8 கீ மீ தூரம் அமைக்கப்பட்டது.. தற்போது மீண்டும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி அங்கே பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

மன்னார்குடி அசத்தல்: மன்னார்குடி அமைச்சர் டிஆர்பி ராஜா தொகுதி. தமிழ்நாட்டின் சிறிய நகரங்களில் ஒன்று என்றாலும் இங்கே சிப்காட் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது போக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

கோவை போன்ற நகரங்களில் கூட ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் இல்லாத நிலையில் மன்னார்குடியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

சுற்றுலா தலம் வளர்ச்சி: மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அதில் கூடுதலாக.. தெப்பக்குளத்தில் படகு சவாரி மேற்கொள்ளும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான டென்ட் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

பல பெரிய நகரங்களில் கூட ரிங் ரோடு இல்லாத நிலையில் இங்கே ரிங் ரோடு அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ரிங் ரோடு: தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக முக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.

ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி-சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி-திருமக்கோட்டை-சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.

உத்தேச ரிங் ரோடு மூன்றாம் சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும்.

பணிகள் நடக்கிறது: சுற்றுச் சாலையுடன் இணைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட ஆட்சியர் மு.மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று திட்டப் பணிகள் குறித்த நேரடித் தகவல்களைப் பெற்றார். மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ. 2.75 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

வந்தே பாரத்: இப்படிப்பட்ட நிலையில்தான் இங்கே வந்தே பாரத் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. சென்னை மன்னார்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

இதற்கான ரயில்வே தண்டவாள சோதனை பணிகள் நடந்து வருகின்றன. சென்னை - மன்னார்குடி இடையே ஏற்கனவே மன்னை எக்ஸ்பிரஸ் இயங்கும் நிலையில்தான் இந்த ரயில் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+