ஒரு சூரியன் மறைவால் சில நட்சத்திரங்கள் வர பார்க்கின்றன.. போட்டுத்தாக்கும் தமிழிசை!
திமுகவில் வீசி வரும் புயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுகவில் வீசி வரும் புயல் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
அழகிரியின் அதிரடியால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நாளை திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் அழகிரி இன்று கட்சி தொடர்பான பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.
தனக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்றும் இல்லையெனில் கட்சியில் பிளவு ஏற்படும் என மிரட்டும் வகையிலேயே பேசி வருகிறார் அழகிரி.

அழகிரியால் அதிருப்தி
அழகிரியின் பேச்சால் ஸ்டாலின் ஆதரவாளர்களும் திமுக நிர்வாகிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி மறைந்த துக்கத்தில் இருந்து இன்னும் யாரும் மீளாத நிலையில் அழகிரியின் இந்த செயல்பாடு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தமிழிசை கருத்து
திமுகவில் வீசி வரும் இந்த பிளவு குறித்து மற்றக்கட்சிகள் இப்போதே கேலி கிண்டல் என தொடங்கிவிட்டன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் அழகிரியின் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சூரியன் மறைவால்..
சென்னை மாதவரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ஒரு சூரியன் மறைந்த பின்னர் சில நட்சத்திரங்கள் தோன்ற முயற்சி செய்கின்றன.

யார் மிளிரப்போகிறார்கள்?
அழகிரி செயல்பாடு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். யார் மிளிரப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications