"ப்பா.. பேயைக் கொசு கடிக்குமாப்பா?” - வாட்ஸப்பில் ஒரு அப்பா படும் பாட்டைப் பாருங்கப்பா!
சென்னை: மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கு மட்டுமே தெரியும் என்ற வரியுடன் தமிழ்ப் பாடல் ஒன்று உண்டு. அப்படி ஒரு செல்ல மகள் தந்தையை தூங்கவிடாமல் செய்யும் செல்லத் தொல்லை ஒன்று வாட்ஸப்பில் செமையாக உலாவி வருகின்றது. அந்த உரையாடலை நீங்களும் படித்து ரசித்து, உங்கள் மகளின் நினைவில் களிக்க இங்கே உங்களுக்காக...

வாட்ஸ் அப்பில் வந்தது இதுதான்:
நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா, அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!
ஹா...ஹா... பல தந்தைகளின் இன்றைய நிலைமை இதுதான்...என்ன செய்ய தந்தைகளைவிட, மகள்கள் ரொம்ப புத்திசாலிகள் ஆயிற்றே அதான்!
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications