அடடே வாவ்.. விளையாடும் பிள்ளைகளை எப்படி உற்சாகப்படுத்துகிறார் பாருங்கள் இந்த டீச்சர்!

விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள தனது பிள்ளைகளை ஆசிரியை ஒருவர் படுஜாலியாக உற்சாகப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாணவிகளை முழு மூச்சுடன் உற்சாகப்படுத்தும் ஆசிரியை- வீடியோ

    சென்னை: விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள தனது பிள்ளைகளை ஆசிரியை ஒருவர் படுஜாலியாக உற்சாகப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

    அண்மையில் ஆசிரியை ஒருவர் தனது மாணவ மாணவிகளுக்கு க, கா கி, கீயை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஆடல் பாடலுடன் கற்பித்தார். அந்த வீடியோ வைரலானது.

    A Teacher encouraging school students in sports compition

    குழந்தைகளுக்கு புரியும் வகையில் எண்டர்டைமென்ட்டாக பாடம் நடத்திய அந்த ஆசிரியைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ள தனது மாணவ மாணவிகளை, அவர்களுல் ஒருவராய் படுஜாலியாகவும் படுசீரியஸாகவும் உற்சாகப்படுத்துகிறார் ஆசிரியை ஒருவர்.

    கோகோ விளையாடும் தனது மாணவர்களை ஓரமாக நின்று உற்சாகப்படுத்தும் அந்த ஆசிரியை கைகளை தட்டியும் கோகோ விளையாட்டை போன்று உட்கார்ந்து எழுந்தும் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்துகிறார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தனது மாணவர்கள் வெற்றி பெற்றே தீரவேண்டும் என கடுகடு முகத்துடன் ஸ்ட்ரிக் ஆபிஸர்களாக இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக ஆசிரியையும் குழந்தையாய் மாறியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+