சூதுகவ்வும் திரைப்பட பாணியில், திருடுவதற்கு பயிற்சி கொடுத்த வாலிபர் கைது!
திருச்சி: சூதுகவ்வும் திரைப்படத்தில் ஆள் கடத்தலுக்கு ஹீரோ பயிற்சி தருவது மாதிரி, அதே பாணியில், திருடுவதற்கு வகுப்பெடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி, சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்தவர் ரத்தினம். ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மகன் ரமேஷ். படிக்க பிடிக்காததால், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தனது பெயரை துப்பாக்கி ரமேஷ் என்று சூட்டிக்கொண்டார்.

மேலும், திருட்டுகளிலும் ஈடுபட்டுவந்தார். போலீசாரிடம் மாட்டாமல் திருடுவதற்கு என்ன செய்ய என்று யோசித்து, ரயில்வே துறையில் கைவரிசை காட்ட முடிவெடுத்தாராம். ஓடும் ரயில்களில் செயின்பறிப்பு, பயணிகளின் உடமைகளை திருடுவது, ரயில்வேக்கு சொந்தமான இரும்புகளை திருடுவது, ரயில்வே கிடங்குகளில் வந்து இறங்கும் உணவு பொருள் மூட்டைகளை கொள்ளையடிப்பது, ரயில்வே குடியிருப்புகளில் கொள்ளையடிப்பது, ரயில் தண்டவாளங்களில் திருடுவது, பழுதடைந்த ரயில் பெட்டிகளில் இரும்பு ராடு உள்ளிட்ட பொருட்களை திருடுவது என சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் சிக்காத வகையில் லாவகமாக திருட ஆரம்பித்திருக்கிறார்.
அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த 20 வருங்களாக இந்த வரிசையில் கைவரிசை காட்டி வந்திருக்கிறார். இதன் மூலம் கைநிறைய சம்பாதித்த துப்பாக்கி ரமேஷ், தான் கற்றுக்கொண்ட வித்தையை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க நினைத்து, அதற்கு தகுந்த நபர்களை தேடியிருக்கிறார். அவரது தேடலில் வேலையில்லா பட்டதாரிகள், வறுமையில் வாடும் இளைஞர்கள் சிக்கியிருக்கின்றனர். அவர்களுக்கு திருச்சி சாமியார் தோப்பு பகுதியில் திருடுவது குறித்து பயிற்சி வகுப்பு எடுத்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், ரயில்வே கிடங்கில் உணவு பொருள் மூட்டையை திருட வந்திருக்கிறார் துப்பாக்கி ரமேஷ். அப்போது, துப்பாக்கி ரமேஷை சுற்றி வளைத்த, ரயில்வே காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், துப்பாக்கி ரமேஷ் சங்கிலியாண்டபுரம் பகுதியில் திருடுவது குறித்து பலருக்கு பயிற்சி வகுப்பெடுத்தது தெரியவந்திருக்கிறது. மேலும், ரயில்வே காவல்துறையினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முருகேசனுக்கும், ரமேஷ் பயிற்சி கொடுத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது.
சூதுகவ்வும் திரைப்படத்தில், கடத்தலில் ஈடுபடுவது எப்படி என்று ஹீரோ கதாப்பாத்திரம் கற்றுக்கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும். அதேபோல, திருடுவது எப்படி என, வேலையில்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார் ரமேஷ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications