திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டது.. 10 பேர் காயம்!
திருவாரூர் அருகே ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதன் 2 பெட்டிகள் தடம்புரண்டதில் 10 பேர் காயமடைந்தனர்.
திருவாரூர் : நன்னிலம் அருகே மன்னார்குடி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்தனர்.
மன்னார்குடியிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சென்ற போது ரயில் திடீரென தடம்புரண்டது. இதில் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கியது. இதனால் பயங்கர சத்தம் கேட்டதால் பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. விபத்துகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக மன்னார்குடி- மயிலாடுதுறை இடையிலான ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. தடம்புரண்ட பெட்டிகள் அகற்றப்பட்டவுடன் அந்தப் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications