ஓ சமூகமே.. கொலைகளை விடவும் உன் மெளனம் கொடூரமானது #ராஜலட்சுமி
- ஜோசப் ராஜா
இன்னும் எத்தனை உயிர்கள்
எரிந்து கருகிட வேண்டும்
இன்னும் எத்தனை உடல்கள்
வெட்டிச் சாய்க்கப்பட வேண்டும்
இன்னும் எத்தனை சிறுமிகள்
படுகொலைக்கு ஆளாக வேண்டும்
எல்லாவற்றையும் பார்ப்பது போல
தலையும் உடலும் துண்டாக்கப்பட்ட
அந்தப் பதிமூன்று வயதுச்சிறுமி
ராஜலட்சுமியைப் பாருங்கள்
எல்லாவற்றையும் பேசுவது போல
அந்தப் பச்சிளம் குழந்தையின்
படுகொலையைப் பற்றியும் பேசுங்கள்

சாதியின் பலிபீடத்தில்
ஆணாதிக்க அரிவாளால்
வெட்டிச் சாய்க்கப்பட்ட
அந்த அப்பாவிச் சிறுமியும்
இந்தியாவின் மகளல்லவா
ஓ சமூகமே
கொலைகளை விடவும்
உங்கள் மெளனம் கொடுமையானது
ஓ சமூகமே
கொலைகளை விடவும்
உங்கள் பாராமுகம் பயங்கரமானது
இந்தியாவின் பெருமையை
உலகுக்கே பறைசாற்றும்
உயரமான சிலையின் அடியில்
ஒருங்கிணைந்த இந்தியாவின்
ஓயாத சிறுமையாய்
துண்டாக்கப்பட்ட தலையில் இருந்தும்
துடிதுடித்த உடலில் இருந்தும்
வழிந்தோடிய ரத்தத்தை
பார்க்கவேயில்லையா நீங்கள்
பாதி தூக்கத்தில்
பதறிப்போய் எழநேர்ந்த
இந்த அதிகாலை
எத்தனை கொடூரமாக இருக்கிறது
அந்தச் சிறுமியின் கதறல்களாலும்
அந்தத் தாயின் மன்றாட்டுச் சத்தத்தாலும்
நிறைந்திருக்கிறது என்னுடைய வானம்
கழுகுகளைத் தவிர கழுகுகளைத் தவிர
எதுவுமேயில்லை என்னுடைய வானத்தில்
ஆனாலும் அந்த நீலவானத்தை
நிலையாகப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
ஆனாலும் இதற்கான நீதியைக்கூட
உங்களிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications