சென்னை விமான நிலையத்தில் “மர்மப்பை”, வெடித்த கார் டயர் – போலீஸ் விசாரணை
சென்னை: இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 3 ஆவது வாயிலில் "மர்ம பை" ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு சென்று பையை கைப்பற்றினார்கள். வெடி குண்டு நிபுணர்களும் வர வழைக்கப்பட்டனர்.
அதை பரிசோதனை செய்த போது பையின் உள்ளே ரிமோட் பொம்மை கார் இருப்பது தெரிய வந்தது. விமானத்தில் வந்த பயணிகளில் யாரோ ஒருவர் அதை தவறுதலாக விட்டுச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும், இன்று காலை 10.15 மணிக்கு உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதிக்கு வாடகை கார் ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராத வகையில் அதன் முன் சக்கரங்களில் ஒன்று பலத்த ஓசையுடன் வெடித்தது.
இதனால் தாறுமாறாக ஓடிய அந்த கார் பிளாட் பாரத்தில் ஏறியது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதனால் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவர் காரை அதே இடத்தில் நிறுத்தி விட்டு ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications