"கட்" அடித்து "சிங்கம்" பார்க்கப் போன மாணவர்களை வெளுத்தெடுத்த ஆசிரியர்.. வாட்ஸ் ஆப் பரபரப்பு!
சென்னை: என்ன ஊர், பள்ளி மாணவர்களா அல்லது கல்லூரி மாணவர்களா எனத் தெரியவில்லை, ஆனால் சிங்கம் படத்திற்குப் போனதற்காக சில மாணவர்கள், அவர்களது ஆசிரியரிடம் சரமாரியாக அடி வாங்கும் வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்கள் மூலம் பல நன்மைகளும், பல சமூக அவலங்களும் அவ்வப்போது அம்பலாமாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தின் போது கூட, வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பலரை மீட்க வாட்ஸ் அப் துணை புரிந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால், சமீபத்தில் அழகிய பெண் ஒருவரின் புகைப்படத்துடன், ‘இவர் கேஸ் ஸ்டவ்' ரிப்பேர் செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு திருடுபவர் என்ற தவறான தகவலும் பரவியது நினைவு கூரத் தக்கது. பின்னர் அது தவறான தகவல் என போலீசார் விளக்கமளித்தது வேறு கதை.
இந்நிலையில், தற்போது ஹாஸ்டலில் இருந்து தப்பி சிங்கம் படம் பார்க்கப் போன மாணவரை ஆசிரியர் ஒருவர் அடிப்பது போன்ற வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது.
ஆத்திரமடையும் ஆசிரியர்...
'நேற்று ஹாஸ்டலில் இருந்து மாணவர் ஒருவர் தப்பி சென்று விட்டார்' என்ற புகாருடன் உள் நுழைகிறார் ஒருவர். அதைக் கேட்டு ஆத்திரமடைகிறார் ஆசிரியர் போன்ற தோற்றத்தில் உள்ள ஒருவர்.
அடி வெளுக்கிறார்...
உடனடியாக வாசலில் உள்ள ஷட்டரை இழுத்து மூடச் சொல்லி விட்டு, முதலில் கையால் அடிக்கிறார், பின்னர் குச்சி மூலம் அம்மாணவரை அவர் அடி வெளுக்கிறார்.
சிங்கம் படம்...
அடித்துக் கொண்டே சிங்கம் படத்திற்குப் போனியா என அவர் கேட்கிறார். இதன் மூலம், இந்த வீடியோ சிங்கம் படம் ரிலீசான சமயத்தில் எடுக்கப் பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
வாட்ஸ் அப்பில்...
இது உண்மைச் சம்பவமா அல்லது போலியாக சித்தரிக்கப் பட்டு எடுக்கப் பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், இந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications