நன்றி விவசாயிகளே.. நெகிழ வைக்கும் ஆர்.ஜே.பாலாஜி வீடியோ
ஃபார்ஸ்ட் ஃபுட் உணவு, நவீன ஆடை என எல்லாவற்றுக்கும் அடிப்படை விவசாயம்தான் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்த வீடியோ.
சென்னை: எது மிகவும் முக்கியமான வேலை என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கிறது இந்த வீடியோ. சிறுவர் முதல் பெரியவர் வரை ஆளுக்கொரு வேலையை சொல்கிறார்கள்.
போலீஸ், ராணுவம் என நீளும் பட்டியல், இந்திய பிரதமர் வேலைதான் முக்கியமானது என்பது வரை சென்று முடிகிறது. சிலர் இது ரொம்ப கஷ்டமான கேள்வி என கூறுவதையும் பார்க்க முடிகிறது.
ஆர்.ஜே.பாலாஜி டீம் இந்த கேள்விகளை பல தரப்பினரிடமும் கேட்கிறார்கள். கடைசியாக விவசாயம்தானே முக்கியம் என்று இவர்கள் கேட்கும்போது அதுவரை பதில் சொன்னவர்கள் முகத்தில் அசடு வழிகிறது.
அட, ஆமால்ல.. என்பதை போல ரியாக்ஷன் காட்டுகிறார்கள். முருகப்பா நிறுவனம் இந்த வீடியோவை எடுத்து, விவசாயிகளுக்கு நன்றி என்ற கேப்ஷனோடு முடித்துள்ளது.
டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆடை அவிழ்த்து போராடும் இந்த இக்கட்டான, சூழலில் வீடியோ வைரலாகியுள்ளது. நன்றி விவசாயிகளே.. என முத்தாய்ப்பாய் முடிகிறது இந்த வீடியோ.
ஃபார்ஸ்ட் ஃபுட் உணவு, நவீன ஆடை என எல்லாவற்றுக்கும் அடிப்படை விவசாயம்தான் என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்த வீடியோ. பார்த்து முடித்த பிறகு, அடடே, விவசாயிகள்தாம்ப்பா நிஜ ஹீரோக்கள் என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதை தவிர்க்க முடியாது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications