Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்ளோ பாசம் வச்ச குழந்தைய கொல்ல எப்படி மனசு வந்தது அபிராமி?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    இரு குழந்தைகளை கொன்ற அபிராமியின் மற்றொரு வீடியோ

    சென்னை: குன்றத்தூரில் இரு குழந்தைகளை கொன்ற அபிராமியின் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்வளவு பாசம் உள்ள குழந்தைகளை கொல்ல எப்படிம்மா மனம் வந்தது என்று கேட்க தோன்றுகிறது.

    குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

    வாக்குமூலம்

    வாக்குமூலம்

    இதையடுத்து நாகர்கோவிலுக்கு தப்பி சென்ற அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டு உடன் வாழ்ந்த காதலனையே தூக்கி எறிந்துவிட்டதாக அபிராமி தனது வாக்குமூலத்தில் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

    கொலை

    கொலை

    பொதுவாக கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் ஒன்று குழந்தைகளை உடன் அழைத்து சென்றுவிடுவர். இல்லாவிட்டால் குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு சென்றுவிடுவதுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அபிராமி விஷயத்தில் அவர் இரு பிஞ்சு குழந்தைகளை கொன்று விட்டு சென்றுள்ளார்.

    பதைபதைப்பு

    பதைபதைப்பு

    தாய்பாலுக்கு இணையதானதாக கருதப்படும் பசும்பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றுள்ளார். இது கேட்போர் மனதை பதைபதைக்க வைக்கிறது. அத்தனை கொடுமைக்கார பெண்ணா இந்த அபிராமி என நினைக்க தோன்றுகிறது.

    குழந்தைகளை கொல்ல

    ஆனால் அவர் குழந்தைகளுடன் ஒரு ஷாப்பிங் காம்ப்ளஸில் எடுத்த வீடியோ வெளியாகிவுள்ளது. அதில் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி அத்தனை மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இப்படிப்பட்ட எப்படி குழந்தைகளை கொல்ல மனம் வந்தது என்பது கேள்வியாக உள்ளது. அந்தளவுக்கா இவருக்கு கள்ளக்காதல் கண்ணை மறைத்துவிட்டது? இன்னும் சிறிது நாட்களில் அம்மா கையால் விஷம் குடித்து சாகப்போகிறோம் என்பது தெரியாமல் எத்தனை மகிழ்ச்சி அந்த குழந்தைகளின் முகத்தில்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+