அட்ரஸ் சொல்ல மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய இருவர்
திருத்தணி: முகவரி சொல்ல மறுத்த வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி அருகே தாளவேடு காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் . இவரது நண்பர் முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் . இவர்கள் இருவரும் நேற்றிரவு முருகம்பட்டு கிராமத்துக்கு பைக்கில் சென்றுள்ளனர். அங்குள்ள விநாயகர் கோயில் முன் சிலர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அவர்கள் அருகே பைக்கை நிறுத்திய ராஜேஷ் சத்தமாக ஹாரன் அடித்து சண¢முகம் என்பவரிடம் முகவரி கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘‘எனக்கு எதுவும் தெரியாது வேறு எங்கேயாவது போய் கேளுங்கள்" என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகம் நெஞ்சில் குத்திவிட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் துடித்ததும் பைக்கில் தப்ப முயன்றனர்.
ஆனால் ஊர் மக்கள் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். சண்முகத்தை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மக்கள் அளித்த புகாரின் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications