சென்னையில் வெறிச்செயல்.. வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் சரமாரி வெட்டி கொலை.. 3 பேர் கைது
முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை கொரட்டூரில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி, 53. இவருக்கு அப்புன், மணிபாரதி, விவேக், அரவிந்தன் 24, ஆகிய நான்கு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கும் அதே பகுதியை சார்ந்த மஞ்சுளா என்பருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் மஞ்சுளாவை ரவியின் மூத்த மகன் அப்புன் தலையை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் கடந்த 4 வருடங்களாக இன்னும் அதிகமாக இருந்ததாக தெரிகிறது.

இதன்காரணமாக, மூன்று மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவின் மகன் ஆகஷ்ய் 22 என்பவரை, அப்புன் மற்றும் அரவிந்தன், விவேக் சேர்ந்து கொலை செய்ய முயன்றனர். இது கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கடந்த பதினைந்து நாட்களுக்கு முன் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த கொலைமுயற்சிக்கு பழிவாங்கும் விதமாக நேற்றிரவு 9.30 மணி அளவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த அரவிந்தனை, பத்து பேர் கொண்ட கும்பல் அதே இடத்தில் அரிவாளால் சரமாரி வெட்டி சாய்த்தனர். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலியே துடிதுடிக்க பலியானார். அரவிந்தனுடன் படுத்திருந்த குடியரசன் என்பவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக விக்கி, ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகியோரை கைது செய்துள்ள கொரட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications