Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.15 லட்சம் கேட்டு தந்தையிடம் கடத்தல் நாடகம்- வாங்கிய கடனை அடைக்க மகன் சதி-நெல்லையில் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை : நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக, தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு, மகன் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி முத்து என்பவரின் மகன் வேல்ராஜ். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

 கடத்தல் நாடகம்

கடத்தல் நாடகம்


இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்ததால் வேல்ராஜின் மனைவி தூத்துக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பார்ப்பதற்காக நேற்று வேல்ராஜ் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். பின்னர் இரவில் தனது தந்தையிடம் போன் செய்து சமாதானப்புரத்திற்கு வந்து பஸ்ஸில் இறங்குவதாக கூறியுள்ளார். அவரை அழைத்து செல்வதற்காக, இசக்கிமுத்து சமாதானப்புரத்திற்கு வந்துள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் வேல்ராஜ் வரவில்லை. பின்னர் வேல்ராஜ் போன் செய்தபோது, தன்னை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு ரூ.15 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

 காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து, உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வேல்ராஜ் செல்ஃபோனை தொடர்பு கொண்டபோது ஊருடையார்புரம் பகுதியை காட்டியது. இதனையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது வேல்ராஜ் உட்பட மூன்று பேர் அங்கு இருந்துள்ளனர்.

 திடுக்கிடும் தகவல்கள்

திடுக்கிடும் தகவல்கள்

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது, வேல்ராஜ் தனது நண்பர்களிடம் குறைந்த விலைக்கு நகை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் வேல்ராஜ் , கோவா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

 அம்பலமான கடத்தல் நாடகம்

அம்பலமான கடத்தல் நாடகம்

இதனிடையே பணத்தை கொடுத்த நண்பர்கள் திருப்பி கேட்டதால் அவர்களுக்கு பணத்தை கொடுப்பதற்காகவும், உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கும் வேல்ராஜ் முடிவு செய்தார். இதனால், தந்தையிடம் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக நாடகமாடி ரூ.15 லட்சம் கேட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வேல்ராஜ் மற்றும் அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்த 2 வாலிபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்களிடம் வாங்கிய கடனுக்காக, தந்தையிடம் 15 லட்சம் ரூபாய் கேட்டு, மகன் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+