ஆதார் பேமெண்ட் அவசியம்.. "இந்த" பணிகளை செய்பவர்களுக்கு வரப்போகும் செக்.. மத்திய அரசு தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது. இதற்கு பின் முக்கியமான சில திட்டங்களை வகுத்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

100 நாள் வேலை திட்டம் நாடு முழுக்க கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவும் பெரிய அளவில் சரிவை சந்தித்து உள்ளது.

100 நாள் வேலை திட்டம் ஒரு காலத்தில் இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சரிவில் இருந்து மீட்டது. மக்கள் கையில் பணம் புரண்டதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார சரிவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது.

Aadhaar Card based payment system for MGNREGS may not get extended after June last

ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த 100 நாள் வேலை திட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. பல நாட்கள் வேலை இருப்பது இல்லை. அதற்கும் முறையான சம்பளம் இல்லை, போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்று மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் ஆதார் கார்ட் மூலம் மட்டுமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற முறையை 100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு புகுத்த உள்ளது. அதன்படி ஒருவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வருமானம் பெறுகிறார் என்றால், அவர் ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் முறை ஒன்றின் மூலம் மட்டுமே வருமானம் பெற முடியும்.

அதாவது யுபிஐயோ அல்லது வங்கி வழியாகவோ மட்டுமே பெற முடியும். இதில் எல்லாம் கணக்கு தொடங்க ஆதார் அவசியம். இதன் மூலம் 100 நாள் வேலை திட்டம் மூலம் வருமானம் பெறும் நபர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தீவிரவாதிகள், வெளிநாட்டினர் இந்த திட்டம் மூலம் வருமானம் பெறக்கூடாது என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.

ஆனால் தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் நபர்களிடம் 80 சதவிகிதம் பேரிடம் மட்டுமே ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் சிஸ்டம் இருக்கிறது. அதனால் மீதம் உள்ள நபர்கள் வருமானம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த முறை மூலம் ஆதார் கார்டில் லிங்க் செய்யப்பட்ட வங்கி கணக்கிற்கு வருமானம் செலுத்தப்படும். ஆதார் கார்டுடன் கடைசியாக லிங்க் செய்யப்பட்ட கணக்கு எதுவோ அதற்கு வருமானம் செலுத்தப்படும். அதோடு இந்த வங்கி கணக்கு National Payments Corporation of India உடனும் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இதனால் கிராமத்தில் இருக்கும் பலரும் வருமானம் பெறுவது சிக்கல் ஆகி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் வருமானம் பெறும் படிப்பறிவு அற்ற பலர் வருமானம் பெறுவது இந்த புதிய முறை மூலம் சிக்கல் ஆகி உள்ளது. 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

பிப்ரவரி மாதமே இதற்கான காலக்கெடு முடிய வேண்டிய நிலையில், ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டு தற்போது ஜூன் 30 வரை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Aadhaar Card based payment system for MGNREGS may not get extended after June last

ஜூன் 30க்கு பின் மேலும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 1ம் தேதி கண்டிப்பாக இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடைய அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியம் ஆகி உள்ளது. சமீபத்தில் கூட நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில்தான் 100 நாள் வேலை திட்டத்திற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+