ஆதார் அட்டை இல்லாதோருக்கு கேஸ் மானியம் நிறுத்திவைப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை: ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே ஆதார் அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் மானியம் வழங்கப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதம் மாதம், 30 தேதிக்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கவிட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தமிழகத்தில், 1.62 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மத்திய அரசு, 2015 ஜனவரி மாதம், சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை துவக்கியது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கு, காஸ் ஏஜன்சிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அந்த விண்ணப்பத்துடன், வாடிக்கையாளரிடம் இருந்து, ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலை, எண்ணெய் நிறுவனங்கள் கேட்டன; ஆனால், பலரிடம், ஆதார் அட்டை இல்லை.
இதனால், மக்களிடம், நேரடி மானிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின், வாடிக்கையாளரிடம் இருந்து, வங்கி கணக்கு புத்தக நகலை மட்டும் பெற்று, மானிய திட்டத்தில் சேர்த்தன. சிலிண்டர் வாங்கிய பின், மானிய தொகை, வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள், ஆதார் அட்டை நகலை தராதவர்களுக்கு, மானியத்தை நிறுத்த, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன.
இது தொடர்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தரப்பில் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதம் மாதம், 30 தேதிக்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கவிட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
எனவே, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை பெறுவதை வலியுறுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 7.1 கோடி மக்களில் 6.30 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளனர். சென்னையை பொருத்தவரை 70% மக்கள் ஆதார் அடையாள பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications