ஆடி முதல்வெள்ளி… அம்மன் கோவில்களில் பக்தர்கள் வெள்ளம்
சென்னை: ஆடி மாதம் முதல் வெள்ளியையொட்டி இன்று தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பெண் பக்தர்கள் பெருந்திரளாக வந்து தரிசனம் செய்தனர்.
அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தும், பொங்கல் வைத்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வேண்டிக்கொண்டனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி மாத பிறப்பையொட்டி தமிழகத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் நேற்று காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி வெள்ளி
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது மிகச் சிறந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது ஐதீகம். அதுவும் அம்மனுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் குளிர்ந்த மனதோடு கேட்கும் வரங்களை கொடுப்பாள் என்று நம்பிக்கை உள்ளதால் இந்த நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பெண்கள் அதிக பக்தியுடன் பங்கேற்று தங்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட அம்மனை வழிபடுகின்றனர்.

முதல் வெள்ளிக்கிழமை
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன், கோலவிழி பத்ரகாளியம்மன், நாகாத்தம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிசேகம் செய்தும் வழிபாடு நடத்தினர். முண்டகக்கண்ணியம்மன் கோவிலில் காலையில் இருந்தே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அகிலாண்டேஸ்வரி அம்மன்
இன்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் திருவானைக்காவல் கோயிலில் அகிலாண்டேசுவரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆடி வெள்ளியையொட்டி இன்று மூலவர் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை, மலர்க்கிரீடம், காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில நின்று அம்மனை வழிபட்டனர்.

சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மடப்புரம் காளி கோவில்
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபட்டனர். பக்தர்களின் வசதிக்காக மதுரை, மானாமதுரை, சிவகங்கையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications