ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 28ல் உள்ளூர் விடுமுறை
காஞ்சிபுரம்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஜூலை 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆடி மாதம் வரும் கிருத்திகை நட்சத்திர நன்னாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருத்தனி முருகன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் ஆடிக்கிருத்திகை நாளில் வழிபாடு செய்ய வருகை தருவார்கள். இதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகிற 28ம்தேதி(வியாழக்கிழமை) ஆடிக்கிருத்திகை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்று திருவள்ளுர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
இந்த உள்ளூர் விடுமுறை நாட்கள் செலாவணி முறிச்சட்டம் 1881 கீழ் வராது என்பதால் மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும் சார் நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு (28.07. 2016) தேதியில் செயல்பட வேண்டும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு 06.08.2016 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதேபோல், வருகிற 30ம் தேதி பணி நாளாகவும் அறிவித்து அம் மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வல்லக்கோட்டையில் உள்ள முருகன் கோயில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வருகிற 28ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல், வருகிற 30ம் தேதி பணி நாளாகவும் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications