ஆடி கிருத்திகை: முருகன் ஆலயங்களில் காவடி சுமந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆடிக்கிருத்திகை இன்று முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பக்தர்கள் காவடி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோயில்களில் குவிந்த பக்தர்கள் அரோகரா முருகனை மனமுருக வழிப்பட்டனர்.
முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்கிழமையான இன்று ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்படுவதால்
ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம்,தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆகியவை முக்கியமான விஷேசங்கள்.

ஆடிக்கிருத்திகை
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும். பக்தர்கள் விரதம் இருந்து முருகன் கோயிலுக்கு சென்று மனமுருக வழிபாடுவார்கள். அதன்படி இன்று, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.

அறுபடை வீடுகளில் தரிசனம்
முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி,சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே குவிந்துள்ளனர். பால்குடம் எடுத்து வந்தும், காவடிகள் சுமந்து வந்தும் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

சென்னை முருகன் ஆலயங்கள்
சென்னையில் வடபழனி, கந்த கோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, திருப்போரூர் கந்தசாமி முருகன் ஆலயங்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தோள்களில் காவடி சுமந்தும், உடலில் பல இடங்களில் அலகு குத்தியும் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்தனர்.

வடபழனியாண்டவர்
வடபழனியில் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்கள் காலையில் இருந்தே குவியத் தொடங்கினர்.
பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு வழிபட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications