ஆடிமாதம்… 108 அம்மனை தரிசிக்கலாம் வாங்க!... தமிழக அரசு அழைப்பு
சென்னை: ஆடி மாத பிறப்பை முன்னிட்டி, 108 அம்மன்களை தரிசிக்கும் சுற்றுலாவுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு:
ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கும் சுற்றுலா செல்லும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சுற்றுலா ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஐந்தாம் நாள் இரவு சென்னையை வந்தடையும்.
இந்தச் சுற்றுலா திட்டத்தின்படி, முதல் நாள் வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கவும், அடுத்தடுத்த நாள்களில் தஞ்சாவூர், மதுரை, திருச்சியிலும் பக்தர்கள் தங்க வைக்கப்படுவர்.

சென்னையில் தொடங்கி
சென்னை, வண்டலூர், பொத்தேரி, செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர், கன்னிகோயில், புதுவை, கடலூர், சிதம்பரம், கொள்ளிடம், சீர்காழி, மாயவரம், திருக்கடையூர், ஒழுகைமங்கலம் அம்மன் ஆலையங்களை தரிசிக்கலாம்.

மதுரை மீனாட்சியம்மன்
காரைக்கால், நாகப்பட்டினம், சிக்கல், புரவச்சேரி, திருவாரூர், காட்டூர், புன்னைநல்லூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கானாடுகாத்தான், திருப்பத்தூர், மதுரை, திருப்பரங்குன்றம், உறையூர், திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருபட்டூர், சிறுவாச்சூர், திருவக்கரை ஆகிய இடங்களில் அம்மன்களை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா கட்டணம்
இருவர் தங்கும் வசதியுடன் முன்பதிவு செய்ய ரூ.5 ஆயிரமும், சிறுவருக்கு (4 முதல் 10 வயது வரை) ரூ.4,900-ம், தனிநபர்-தனி அறை வசதியுடன் தங்க ரூ.6,500-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு அவசியம்
மேலும் விவரங்களுக்கு, 044-2533 3444, 2533 3333, 2533 3857, 25333286 ஆகிய கட்டணமில்லாத தொலைபேசிகளைத் தொடர்பு கொள்ளலாம். இணையதள முகவரி: www.tamilnadutourism.org, ஆன்லைன் பதிவு: www.ttdconline.com, மொபைல் பதிவு: www.mttdconline.com ஆகியவற்றிலும்
முன் பதிவு செய்யலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications