அப்பு... நம்ம மதுர பயலுக டாஸ்மாக் பாரிலும் வெச்சானுங்க பாரு செம "ஆடித் தள்ளுபடி... "
சென்னை: ஆடித் தள்ளுபடின்னா ஜவுளிக் கடைக்கும் வீட்டு உபயோக பொருட்களுக்கும் மட்டுமே உரியதா என்ன? டாஸ்மாக் பாரிலும் ஆடித் தள்ளுபடி ஆஃபர் கொடுத்து விளம்பரம் செய்துள்ளது 'சங்கம் வளர்த்த' மதுரை மாநகரத்து டாஸ்மாக் பார் நிர்வாகிகள்..
கிமு, கிபி என வரலாற்று சிறப்புமிக்க பெருநகரம் மதுரை மாநகரம்.. தூங்காநகரமாக அழைக்கப்படுகிற இந்த மாநகரம் தற்போது புதிய 'சாதனை' படைத்திருக்கிறது..

ஆடி மாதம் என்றாலே ஜவுளிக் கடைகளிலும் வசந்த் அண் கோ பாணி கடைகளிலும் கூட்டம் அலைமோதும்.. இந்த களேபர கூப்பாடுகளுக்கு மத்தியில் மதுரையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது இந்த போஸ்டர்...
"ஹார்விபட்டி பஸ்டாப்-ல் உள்ள டாஸ்மாக் பாரில் ஆடி மாதம் முழுவதும் கிளாஸ் ரூ2; தண்ணீர் பாக்கெட் ரூ 2; சுண்டல், பயறு இலவசம்" என்று போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பார் நிர்வாகம்...
தமிழகத்தில் மதுவிற்பனை குறைந்துவிட்டதாக தமிழக அரசு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதன் பாரத்தை சுமக்கும் வகையில் ஆடித் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது போல ஹார்விபட்டி டாஸ்மாக் நிர்வாகம்...
பார்ப்போம்... ஜவுளிக்கடைக்குப் போற கூட்டம் போல ஹார்விபட்டி டாஸ்மாக் பாருக்கும் கூட்டம் போகுதான்னா பார்க்கனும்..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications