டெல்லி தேர்தல் தந்த வெற்றி... 2016ல் தமிழகத்தில் களமிறங்கும் ஆம் ஆத்மி கட்சி
சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்த வெற்றியை தமிழகம் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இனிப்புகளை வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர்கள், இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர். டெல்லி வெற்றி தந்த நம்பிக்கையால் 2016ஆம் ஆண்டு தமிழகத்திலும் ஆம்ஆத்மி கட்சி களமிறங்க தயாராகி வருகிறது.

துடைப்பம் ஏந்தி கொண்டாட்டம்
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை சென்னையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர். கையில் துடைப்பம் ஏந்தி தங்களின் மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.

உற்சாக இனிப்பு
சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கிய ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

2016 சட்டமன்ற தேர்தலில்
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்தியா, டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழக ஆம் ஆத்மி கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுத்தம் செய்த துடைப்பம்
பட்டாசு வெடித்த பின்னர் பட்டாசு குப்பைகளை தங்களது சின்னமான துடைப்பத்தால் சுத்தம் செய்தனர். வழக்கமாக அரசியல் கட்சியினர் பட்டாசு வெடித்தபின்னர் அந்த பகுதி குப்பைக்காடாக காட்சி அளிக்கும், ஆனால், ஆம் ஆத்மி கட்சியினரின் நடவடிக்கை சற்று புதுமையாக இருந்தது.

ஸ்வீட் எடு கொண்டாடு
மதுரையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தினர் பாக்கெட் நிறைய மிட்டாய் வைத்துக்கொண்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். பெரியார் பேருந்து நிலையம், பழங்காநத்தம் பகுதிகளில் குழுமிய ஆம் ஆத்மி கட்சியினர் போடு ஒரு குத்து என்று நடனமாடினர்.

எளிமைதான் தாரக மந்திரம்
இத்தனை பெரிய வெற்றிக்கு ஒரு ரூபாய் மிட்டாய்தானா? என்று பொதுமக்கள் ஆம் ஆத்மி கட்சியினரிடம் கேட்டனர். அதற்கு பதிலளித்த தொண்டர்கள், எங்கள் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் இந்த வெற்றியை எளிமையாக கொண்டாட கூறியுள்ளார் எனவேதான் ஒரு ரூபாய் மிட்டாய் கொடுக்கிறோம். எங்களின் மிட்டாய் விலை கம்மிதான், ஆனால் இனிப்பு அதிகம் என்று கூறி அசத்தினர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications