ஆம் ஆத்மியில் நடிகை நமீதாவா? மறுக்கும் தமிழக ஒருங்கிணைப்பாளர்
சென்னை: ஆம் ஆத்மி கட்சியில் நடிகை நமீதா இணைய உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி சாதாரண மக்களின் குரலாக ஒலிக்கிறது. அக்கட்சியினருக்கு என் வாழ்த்துக்கள். நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். முழு நேர அரசியல்வாதியாகவும் மாறுவேன். எந்த கட்சியில் சேருவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது என நடிகை நமீதா கூறியிருந்தார்.

இதையடுத்து நமீதா ஆம் ஆத்மி கட்சியில் சேரப்போகிறார் என்றும், அவருக்கு அக்கட்சியில் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.
இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளர் லெனின் மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மற்ற கட்சியில் இருந்து பெரிய தலைவர்கள் வந்தாலும், திரையுலகில் இருந்து நடிகர்கள், நடிகைகள் வந்தாலும் கட்சியின் உறுப்பினராகத்தான் சேர்த்துக்கொள்வோம். கட்சியில் எந்தவித பொறுப்பும் வழங்க தயாராக இல்லை என்றார்.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை விரும்புபவர்கள் சிலர் கூறுகையில், நமீதா எங்கு போனாலும் ஹாய் மச்சான்ஸ் என்றுதான் பேசுவார். அவரை கட்சியில் சேர்த்தால், ஆம் ஆத்மி கட்சியை, ஹாய் மச்சான்ஸ் கட்சி என பெயர் மாற்றம் செய்ய வேண்டியதுதான். பணக்காரர்கள், பிரபலங்கள் எங்கள் கட்சியில் சேருவது தவறு அல்ல. அதனையும் நாங்கள் வரவேற்கிறோம்.
கட்சியில் சேர்பவர்கள் எதனை கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விரைவில் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சில குறிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications