'ஆம் ஆத்மி'க்கு தமிழகத்தில் உறுப்பினர்களை சேர்க்க ஹெல்ப்லைன்...!

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி முதல் முறையாக போட்டியிட்டு 28 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தனி செல்வாக்குடன் திகழ்ந்த காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித்தை ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடித்துள்ளார்.
மக்களிடையே ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி அந்த கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அதன் செயல்பாட்டை தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
பண பலத்தையும் தாண்டி சாதாரண மக்களும் தேர்தலில் நிற்க முடியும். வெற்றி பெற முடியும் என்பதை டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி நிரூபித்துள்ளது. ஊழலை ஒழிப்பது, ஊழல் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதே எங்கள் நோக்கம் என்று ஆம்ஆத்மி கட்சியின் தமிழக துணை ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறியுள்ளார்.
தமிழகத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே நாங்கள் கட்சியைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்பட 14 மாவட்டங்களில் குழுக்கள் நியமித்துள்ளோம். மற்ற மாவட்டங்களிலும் விரைவில் நியமிப்போம்.
இதுவரை 7 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கிறார்கள். இனி நிறைய பேர் சேருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எங்கள் கட்சியில் சேருவதற்கும், கொள்கை, குறிக்கோள் பற்றி அறிந்து கொள்ளவும் 7667910234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களுக்கும், பெண்களுக்கு தனி குழுக்களை ஏற்படுத்த இருக்கிறோம் என்றும் லெனின் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications