கோவா மக்கள் முட்டாள்கள் இல்லை.. முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்
பனாஜி: கோவா மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, டெல்லி போன்று இங்கு ஆம் ஆத்மி கட்சியால் வெற்றிப் பெற முடியாது என்று அம்மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யூனியன் பிரதேசமான கோவாவிற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. 70 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டுள்ள கோவாவை ஆம் ஆத்மி குறிவைத்து களமிறங்கவுள்ளது.

இதன் முதல்கட்ட முன்னோட்டமாக நேற்று கோவா தலைநகர் பனாஜியில் ஆம் ஆத்மி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜிரிவால் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜிரிவாலை வரவேற்றுள்ள கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், கோவா மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்றும் டெல்லி போன்று இங்கு ஆம் ஆத்மி கட்சியால் வெற்றிப் பெற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ஆம் ஆத்மி கோவாவில் போட்டியிடுவதை வரவேற்கிறேன். ஆனால் அவர்களால் வெற்றிப் பெற முடியாது. கோவா மக்கள் உணர்ச்சிகரமானவர்கள் கிடையாது. ஆம் ஆத்மி கங்கிரஸ் வாக்குகளை பிரிக்கும். ஆனால் ஜெயிக்காது." என்று தெரிவித்தார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வகையில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications