ஓவியாவிற்கு ஆரவ் கொடுத்த முத்தம்... அம்பலப்படுத்திய கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவ் மீதான காதலில் ஏற்பட்ட மன அழுத்தம் ஒவியாவை பிக்பாஸ் வீட்டை விட்டே வெளியேற வைத்தது. ஆனால் ஓவியாவிற்கு தான் கொடுத்த மருத்துவ முத்தம் பற்றி விளக்கம் அளித்தார் ஆரவ்.

தான் ஓவியாவிற்கு கொடுத்த முத்தம் பற்றி கூறிய உடன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கு அதிர்ச்சிதான். கணேஷ் வெங்கட்ராம் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா - ஆரவ் ஜோடிதான் ரொமான்ஸ் ஜோடி. டாஸ்க்களில் இந்த ஜோடிதான் டூயட் பாடும். இது காதலாக மாறி விட்டதோ என்றுதான் ரசிகர்கள் கருதினர்.

மனநோயாளிகளாக நடித்த போது காதல் தோல்வி போல நடிக்க கூட ஓவியாவினால் முடியவில்லை. ஆரவ்வைப் பார்த்து முத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தார்.

ஓவியாவின் மன அழுத்தம்

ஓவியாவின் மன அழுத்தம்

ஒரு கட்டத்தில் ஆரவ் காதலிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஓவியா மன அழுத்தம் காரணமாக நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆரவ் மீதான காதல்

ஆரவ் மீதான காதல்

பிக்பாஸ் குடும்பத்தினரை தனித்தனியாக பேசினார் கமல். ஓவியா காதலித்த ஆரவ்வை அழைத்து பேசினார். அதில், தான் ரகசியம் அம்பலமானது.

ஓவியாவின் முத்தம்

ஓவியாவின் முத்தம்

அப்போது கமல், ஓவியா உங்களிடம் போகும் போது என்ன கேட்டார் என்றார். அதற்கு ஆரவ் கூறுகையில், நான் கொடுத்ததை திருப்பி கொடுத்துவிடு என்றார். எனக்கு ஓவியா முத்தம் கொடுத்தார். அதனை தான் ஓவியா திருப்பி கேட்டார் என்றார்.

முத்தத்தில் பலவிதம்

முத்தத்தில் பலவிதம்

முதலில் நான் முத்தம் கொடுக்கவில்லை. உண்மையிலேயே கொடுக்கவில்லையா என்று கமல் கேட்க, இல்லை சார் நான் திருப்பி கொடுத்துவிட்டேன் என்றார். சினேகன் சொன்னதினால் மருத்துவ முத்தம் கொடுத்ததாக கூறினார்.

முத்தம் பற்றி பேசிவிடுங்கள்

முத்தம் பற்றி பேசிவிடுங்கள்

இதை கேட்ட கமல், வீட்டில் உள்ளவர்களிடம் இந்த முத்தம் பற்றி கூறி விடுங்கள் என்றார். விளம்பரத்தில் சொன்னது போல நான் உங்களை கண்காணித்து கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கமல்.

அதிர்ச்சியடைந்த கணேஷ்

அதிர்ச்சியடைந்த கணேஷ்

ஆரவ் முகத்தில் ஈயாடவில்லை. வெளியே வந்த ஆரவ், நடந்த விசயத்தை கூறவே, கணேஷ் வெங்கட்ராமிற்கு அதிர்ச்சி ஏற்பட்டதுதான் உண்மை. அப்படி எதுவுமே நடக்கலைன்னு நீங்க சொன்னீங்களே என்று ஆரவ்வை பார்த்து கேட்டார் கணேஷ்.

Kasthuri supports to Kamal in bigg boss issue-Oneindia Tamil
ஏமாத்தியது உண்மையா ஆரவ்

ஏமாத்தியது உண்மையா ஆரவ்

ஓவியா அடிக்கடி ஆரவ்வை பார்த்து சொல்வார், யு ஆர் சீட்டிங் மீ என்று சொல்வார். நிஜமாகவே ஏமாற்றிதான் விட்டார் ஆரவ் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ பொதுவெளியில் ஆரவ் ஓவியா இடையேயான ரொமான்ஸ் வெளிச்சத்துக்கு வந்து விட்டதுதான் உண்மை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aarav has kissed Oviya in bigg boss house. And he confessed.
Please Wait while comments are loading...