குண்டு ஆர்த்தி அதிமுகவில்… கணவர் கணேஷ்கர் பாஜகவில் ஐக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்துள்ளார். லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

திரை உலகிலும், டிவியிலும் பிரபலமாக உள்ள நகைச்சுவை நட்சத்திர தம்பதிகளான ஆர்த்தி - கணேஷ்கர் அரசியலில் ஆளுக்கொரு பக்கம் பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒரு குடும்பத்தில் அப்பாவும், மகனும் வேறு வேறு கட்சியில் இருப்பார்கள், அதுபோல அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் இருந்தாலும் வேறு வேறு கட்சியில் சேருவார்கள். இங்கு நட்சத்திர தம்பதிகள் வேறு வேறு கட்சியில் சேர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதிமுகவில் ஆர்த்தி

அதிமுகவில் ஆர்த்தி

நடிகை ஆர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு உள்ளார்.

பாஜகவில் கணேஷ்கர்

பாஜகவில் கணேஷ்கர்

இந்த நிலையில் ஆர்த்தியின் கணவரும் நடிகருமான கணேஷ்கர், இன்று காலை பாஜக அலுவலகத்துக்கு வந்தார். மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

உறுப்பினர் அட்டை

உறுப்பினர் அட்டை

அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அவரிடம் உங்கள் மனைவி ஒரு கட்சியிலும், நீங்கள் ஒரு கட்சியிலும் இருப்பது முரண்பாடாக தெரியவில்லையா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அது பிரச்சினையில்லை

அது பிரச்சினையில்லை

அதற்கு பதில் சொன்ன கணேஷ்கர், ‘‘எனது மனைவி வேறு கட்சியில் இருப்பது உண்மை தான். என்னை பொறுத்தவரை மோடி பிரதமராக வேண்டும் என்றார்.

இந்தியாவை காப்பாற்ற

இந்தியாவை காப்பாற்ற

இன்றைய சூழ்நிலையில் நரேந்திரமோடி தான் பிரதமரானால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.

பிரசாரம் செய்வேன்

பிரசாரம் செய்வேன்

மோடி பிரதமராக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவேன்'' என்றும் கணேஷ் தெரிவித்தார்.

தம்பதிகள் பிரசாரம்

தம்பதிகள் பிரசாரம்

ஜெயலலிதா பிரதமராக மனைவி ஆர்த்தி பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். மோடி பிரதமராக கணவர் கணேஷ்கர் பிரசாரத்திற்கு செல்ல உள்ளார். ஆக யார் பிரதமராக வந்தாலும் குடும்பத்தில் பிரச்சினையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+