'நைஸாக' ஸ்வீட் விலையைக் கூட்டிய ஆவின்...!: ஓ.பியின் 'தீபாவளி பரிசு'
சென்னை: தனியார் பால் விலைதானே உயர்ந்திருக்கிறது. நல்லவேளை ஆவின் பால் விலை உயரவில்லையே என்று மக்கள் நினைத்துக் கொண்டுள்ள நிலையில் அதிரடியாக ஸ்வீட் விலையை ஏற்றியுள்ளது ஆவின் நிர்வாகம்.
தீபாவளி சமயத்தில் போய் இப்படி ஸ்வீட் விலையை ஏற்றியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட ரூ. 40 வரை விலையை ஏற்றியுள்ளது ஆவின் நிர்வாகம். இதனால் இந்த தீபாவளிக்கு ஆவின் ஸ்வீட்கள் சற்று சூடாக இருக்கும்.

தீபாவளி சிறப்பு பலகாரம்...
ஆவின் நி்ர்வாகம் ஆண்டுதோறும் தீபாவளி சமயத்தில் சிறப்பு இனிப்பு வகைகளை செய்து விற்பனைக்கு விடும். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கும்.

வழக்கமான ஸ்வீட்கள்...
வழக்கமாக, பால்கோவா, பேடா, மைசூர் பாகு, குலோப்ஜாமூன் போன்ற இனிப்புகளை தனது பார்லர் மூலம் விற்று வருகிறது ஆவின்.

தீபாவளிக்கு ஸ்பெஷல் ஸ்வீ்ட்கள்...
ஆனால் தீபாவளியின்போது ஸ்பெஷல் ஐட்டங்களைக் களம் இறக்குவது ஆவினின் வாடிக்கையாகும்.

இந்த வருடம் அல்வா...
இந்த வருடம், உலர் பருப்பு அல்வா, முந்திரி கேக், பாதாம் அல்வா, சாக்லேட் அல்வா, முந்திரி அல்வா என ஐந்து வகை அல்வாக்களை அது தயாரித்து விற்பனைக்கு விடுகிறது.

விலை ஜாஸ்திதான்...
ஆனால் விலைதான் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 40 வரை கிலோவுக்கு உயர்த்தியுள்ளனர். இது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீபாவளி பரிசு போல.
அம்மா ஜெயிலில் இருக்கும் நிலையில் யாரும் தீபாவளிக்குக் கூட ஸ்வீட் சாப்பிடக் கூடாது என்று விலையை ஏற்றினாார்களோ என்னவோ!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications