‛பர்ப்பிள்’ நிறம்.. ஆவினில் செறிவூட்டப்பட்ட பசும்பால் அறிமுகம்.. இவ்வளவு சத்துகளா? விலை என்ன? சூப்பர்
சென்னை: ஆவின் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் புதிதாக இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்' நிற பாக்கெட்டில் இந்த செறிவூட்டப்பட்ட பால் விற்பனை செய்யப்படும் நிலையில் அதில் உள்ள சத்துகள் என்னென்ன? விலை என்ன? இந்த பாலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. ஆவின் சார்பில் பால், ஐஸ்கிரீம், இனிப்பு, நெய் உள்ளிட்ட பால் சார்ந்த 100க்கும் அதிமான பொருட்கள் விற்பனை செய்யப்ட்டு வருகின்றன.

ஆவின் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் ஆவினில் தொடர்ந்து புதிதாக பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். இது ஆவின் நிறுவனத்தை இன்னும் பிரபலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் ஆவின் சார்பில் செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது பசும்பாலில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துகள் செறிவூட்டம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் வழிக்காட்டுதலின் படி பாலில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி சத்துகள் செறிவூட்டம் செய்யப்படுகின்றன. ஆவினில் தற்போது நீலம், பிங்க், ஆரஞ்சு, பச்சை நிறத்தில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் செறிவூட்டப்பட்ட பசும்பால் பர்ப்பிள் நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பாலில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் உள்ளன. இந்த பாலை பருகுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்பார்வை திறன் அதிகரிக்கும். மேலும் எலும்புகளை பலமாகும். ஆவினில் இன்று இந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அனைத்து மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பாலில் கொழுப்பு சத்தும் 3.5 சதவீதம் என்ற அளவில் நிறைந்து இருக்கும். அரைலிட்டர் ரூ.22க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த சட்டசபை கூட்டதொடரில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பசும்பால் ஆவினில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications