திரைமறைவில் என்ன நடந்ததோ, ஆவின் பால் ஊழல் வழக்கு குப்பைக் கூடைக்கு போய்விட்டது: கருணாநிதி
சென்னை: ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளிவந்து, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ?. அந்த வழக்கே குப்பைக் கூடைக்குப் போய்விட்டது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆவின் நிர்வாகம் பால் கொள்முதலைப் பல வழிகளிலும் குறைத்துவிட்டது. விவசாயிகள் பாலைக் கறந்து கூட்டுறவு சங்கங்களுக்குக் கொண்டு வந்தால், அந்தப் பாலை முழுவதுமாகக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். கொள்முதல் செய்யும் பாலுக்கான பணத்தையும் உடனடியாகப் பட்டுவாடா செய்யாமல் இழுத்தடிக்கிறார்களாம்.
பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால், அவர்கள் ஆங்காங்கே கறந்த பாலை சாலையிலே கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு வகைப் போராட்டம் நடத்தியும், இந்த அரசினர் அதைப்பற்றிக் கவலையே படுவதில்லை.
ஆவின் பால் நிறுவனத்திலே நடைபெற்ற கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் வெளிவந்து, அந்தத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதற்குப் பிறகு திரைமறைவில் என்ன நடந்ததோ?. அந்த வழக்கே குப்பைக் கூடைக்குப் போய்விட்டது.
தற்போது பால் உற்பத்தி 2.02 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது என்றும், அதே நேரம் பால் கொள்முதல் விலை முறைப்படுத்தப்படாத காரணத்தால், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.
ஆவின் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 28 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் என்றால், தனியார் பால் பெரிய நிறுவனங்கள் லிட்டர் 22 ரூபாய்க்கும், சிறிய அளவிலான வியாபாரிகள் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கும் தான் கொள்முதல் செய்கிறார்கள். இதன் காரணமாகத் தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 2,628 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்களின் இந்தப் பிரச்சினையைப் போக்க அ.தி.மு.க. அரசு ஆவின் நிறுவனம் மூலமாக உற்பத்தியாளர்களிடம் உள்ள எல்லா பாலையும் அதற்குரிய பணத்தைக் கொடுத்து, தானே கொள்முதல் செய்து, பாலாக மக்களுக்கு விற்பனை செய்தது போக, மீதமுள்ள பாலை பவுடராக மாற்றி சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அந்தப் பால் பவுடரைப் பயன்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்க்கட்சிக்காரர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று காத்திருக்காமல், ஆட்சியாளர்களே இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபடுவது தான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு. இனியாவது ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications