சென்னை: இஞ்ஜினியரிங் மாணவி கடத்தல்: 50 லட்சம் கேட்ட கும்பல் கைது
சென்னை: சென்னையில் தனியார் இஞ்ஜினியரிங் கல்லூரி மாணவியை கடத்தி 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அடையாறு சாஸ்திரி நகரைச் சேர்ந்த இன்ஜினீயரிங் மாணவி ப்ரியா (19). மாணவி பிரியா தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். சாஸ்திரி நகரில் நேற்று முன்தினம் காலையில் ப்ரியா வழக்கம்போல தனது கல்லூரி பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று திடீரென ப்ரியாவின் முன்னால் வந்து நின்றது.
கண் இமைக்கும் நேரத்தில் காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி குண்டு கட்டாக அவரை காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றனர். மாலையில் ப்ரியா வீடு திரும்பாததால் பெற்றோர் கலக்கம் அடைந்தனர்.
ப்ரியா எங்கு சென்றாளோ? என்கிற பதட்டத்துடன் உறவினர்கள் வீடுகளிலும், அவரது தோழிகளிடமும் போன் செய்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ப்ரியாவின் தந்தைக்கு மிரட்டல் போன் ஒன்று வந்தது. அதில் பேசிய வாலிபர், உங்கள் மகள் ப்ரியாவை நாங்கள்தான் கடத்தி வைத்துள்ளோம். ரூ. 50 லட்சம் கொடுத்தால் தான் அவரை உயிருடன் விடுவோம். இல்லையென்றால் ப்ரியாவை பிணமாகத் தான் பார்க்க முடியும் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.
இதுபற்றி ப்ரியாவின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர்.
இரவு முழுவதும் தேடிப் பார்த்ததும் ப்ரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பதட்டம் அதிகரித்தது.
இந்நிலையில் செவ்வாயன்று காலையில் ப்ரியாவின் தந்தை பணத்தை கொண்டு வந்து தருவதாக கடத்தல் கும்பலிடம் தெரிவித்தார். அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள் என கூறி அவரை அலைக்கழித்த கடத்தல் ஆசாமிகள் கடைசியாக ராமாபுரத்துக்கு வந்து பணத்தை கொடுக்குமாறு கூறினர்.
இதையடுத்து கடத்தல் கும்பல் பணத்தை வாங்கும்போது போலீஸ் பிடியில் சிக்கியது. ப்ரியாவை கடத்தியதாக பழனிச்சாமி, லோகநாதன், ராஜாமணி, முருகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் பிடித்தனர். இவர்கள் ப்ரியாவை கடத்திச் சென்று பெருங்களத்தூரில் ஒரு வீட்டில் சிறை வைத்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்று வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ப்ரியாவை போலீசார் அதிரடியாக மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் காணப்பட்டார். எனவே கடத்தல் கும்பல் ப்ரியாவை செக்ஸ் சித்ரவதை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இது தொடர்பாக 5 பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘காதல் விவகாரம் காரணமாகவே இக்கடத்தல் சம்பவம் நடந்துள்ளது என்று நினைத்தோம். ஆனால் பணம் பறிக்கும் நோக்கத்திலேயே ப்ரியா கடத்தப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்'' என்றார்.
சென்னையில் கிழக்கு கடற்கரைசாலை கடந்த சில நாட்களாகவே கடத்தல் களமாக மாறி வருகிறது. 2 வாரங்களுக்கு முன்னர் கூட இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இன்னொரு ஆட்டோ டிரைவர் விரட்டிச் சென்று அப்பெண்ணை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தார். அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காமல் சாதாரண சட்டப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
எனவே ப்ரியா கடத்தல் சம்பவத்திலும் அதே போன்று நடவடிக்கையை போலீசார் எடுத்து விடுவார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் இதுபோன்று அடிக்கடி நடைபெறும் கடத்தல் சம்பவங்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி மாணவிகள் மத்தியில் இந்த சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications