அப்துல் கலாம் பிறந்த நாள்... காரைக்குடி பள்ளியில் இளைஞர் எழுச்சிநாள் விழா
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இந்தியா முழுவதும் இன்று அப்துல் கலாமின் 84வது பிறந்த நாள் விழா மக்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் இளைஞர் எழுச்சி நாளாக இது கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாள் விழா "இளைஞர் எழுச்சிநாள் விழாவாக" 15.10.2015 அன்று கொண்டாடப்பட்டது.

இவ்விழா காரைக்குடி நகர்மன்றத்தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நகர்மன்றத் தலைவர் "அப்துல் கலாம் அறிவியல் மன்றத்தை பள்ளியில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர். அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
காரைக்குடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் மீனா மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், அழகு சுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
விழா நிகழ்வுகள் அனைத்தையும் மாணவர்களே தொகுத்து வழங்கினர். விழாவில் மாணவர்கள், அப்துல் கலாம் அவர்களின் சிறப்புகள் பற்றி, கவிதையாகவும், பாடலாகவும், வில்லுப்பாட்டு மூலமாகவும் வெளிப்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவின் போது பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி செய்திருந்தார். விழாவின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications