அப்துல் கலாம் நினைவு தினம்: கிருஷ்ணகிரி ஜோதிநகர் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி
கிருஷ்ணகிரி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி காலமானார். அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
27.07.2016 புதன்கிழமையன்று ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கபட்டது.

மாணவர்கள் அஞ்சலி
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும் மவுன ஊர்வலம், மலரஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோதிநகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

கலாமின் நற்பண்புகள்
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அப்துல் கலாம் அவர்களின் பல்வேறு பண்பு நலன்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றை விளக்கி, அவரின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம்மிடம் உள்ளது எனக் கூறினார்.

மாணவர்கள் மலரஞ்சலி
அலங்கரிக்கப்பட்ட கலாம் அவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவர்களும், ஆசிரியர்களும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.

பள்ளியில் நினைவு நாள்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications