கதை கேட்டு நச்சரிக்கும் சக கைதிகள்.. தனி சிறை கேட்டு ஜெயிலரிடம் குன்றத்தூர் அபிராமி அடம்
Recommended Video

சென்னை: புழல் சிறையில் சக கைதிகள் கதை கேட்டு எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருப்பதால் தனக்கு தனிச்சிறை வேண்டும் என ஜெயிலரிடம் அபிராமி அழுது அடம்பிடிக்கிறாராம்.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளையில் வசிப்பவர் விஜய். இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். அபிராமி சென்னை வடபழனியில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.
அப்போது அங்கு பணி செய்ய வந்த விஜய்க்கும் அபிராமிக்கும் இடையே காதல் மலர்ந்து பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் திருமணம் செய்து கொண்டனர். இனிதாக இருந்த இவர்களது வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி வந்தது.

கள்ளக்காதல்
மூன்றாம் கட்டளையில் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தவர் சுந்தரம். இங்கு அபிராமி குடும்பத்தினருடன் பிரியாணி சாப்பிட சென்றபோது கள்ளக்காதல் ஏற்பட்டது. தனிமையில் அவ்வப்போது சந்தித்து காதலை வளர்த்து கொண்ட விவரம் நாளடைவில் கணவர் விஜய்க்கு தெரியவந்தது.

ஹவுஸ் அரெஸ்ட்
இதனால் அபிராமிக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதனால் காதலனை சந்திக்க முடியாமல் தவித்த அவர் காமம் கண்ணை மறைத்ததால் தனது செல்ல குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

நாகர்கோவில்
கோயம்பேட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தப்பியோடிய அபிராமி நாகர்கோவிலில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

யாருடனும் பேசுவதில்லை
தற்போது அபிராமி புழல் சிறையில் அடைக்கப்படுள்ளார். அபிராமி சிறையில் இருக்கும் யாருடனும் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. எந்த நேரமும் அழுதுகொண்டிருப்பதாகவும், யாராவது பேச முயற்சித்தாலும் அவர்களிடம் அவர் பேசுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

கதை கேட்கும் சக கைதிகள்
புழல் சிறையில் அபிராமியிடம் நடந்தது என்ன என்று சக கைதிகள் கதை கேட்டு நச்சரித்துக் கொண்டே இருக்கின்றனராம். இதனால் தனக்கு தனி சிறை வேண்டும் என ஜெயிலரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications