திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் கருகலைப்பு.. 3 ஸ்கேன் மையத்திற்கு சீல்.. ஒருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 20 நாட்களாக கருகலைப்பு நடந்து வருவதால் பொதுமக்களிடம் பீதி நிலவி வருகிறது.
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில் கடந்த 20 நாட்களாக கருகலைப்பு நடந்து வருவதால் பொதுமக்களிடம் பீதி நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று ஆரணி அருகே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி பெண் பலி ஆகியுள்ளார். கருகலைப்பு செய்த படிப்புறிவில்லா நாட்டு வைத்திய பெண் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கடந்த 2ம் தேதி டெல்லியிலிருந்து வந்த மத்திய குழு இந்தியாவிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக கருகலைப்பு நடந்தேறி வருகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறது.

சீல்
இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஸ்கேன் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூன்று ஸ்கேன் மையம் மற்றும் புவனேஸ்வரி என்ற மருத்துவமனையை சீல் வைத்தனர். செல்வாம்பாள் என்ற மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அடுத்த கலைப்பு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பேருராட்சியில் கூலி தொழிலாளி கணேசன் மனைவி சுமதி 5 மாத கர்ப்பிணி பெண் சட்டவிரோதமாக கருவை கலைக்க முயற்சி செய்துள்ளார். இதற்காக ஆரணி அருகே உள்ள கஸ்தம்பாடி ஜெய லட்சுமியிடம் சென்றுள்ளார். அவர் சில வருடங்களாக நாட்டு வைத்தியம் செய்து வருகின்றார்.

இறப்பு
ஜெயலட்சுமி படிப்பறிவுயின்றி நாட்டு வைத்தியம் செய்து வருகின்றார். சுமதி அளிக்கும் பணத்திற்கு ஆசைபட்டு ஜெயலட்சுமி கருவை கலைக்க மருந்து அளித்துள்ளார். மருந்தை உட்கொண்ட சுமதி ஜெயலட்சுமி வீட்டிலேயே இறந்து விட்டார்.

போலீஸ் நடவடிக்கை
தகவலறிந்த வந்த களம்பூர் போலீசார் சுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சட்டவிரோதமாக கருகலைப்பு செய்த ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications