நீட் வழக்கில் வரலாற்று தீர்ப்பு... ஏழை, கிராம மாணவர்களுக்கு பலன்.. கல்வியாளர்கள் வரவேற்பு
Recommended Video

மதுரை: தமிழில் நீட் தேர்வை எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் கடந்த 6ம் தேதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அமர்வு இந்த தீர்ப்பை இன்று பிறப்பித்தது. மொத்தம் 49 வினாக்களில் மொழியாக்கம் தவறாக இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்வியாளர் ராம்பிரகாஷ்- தாய் மொழியில் படித்தோருக்கு சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் வழி படித்தவர்கள் அனைவருமே கிராமப்புற மாணவர்கள், ஏழைகள். எனவே இந்த தீர்ப்பு அவர்களுக்கு நியாயம் சேர்த்துள்ளது.
கல்வியாளர், ரவீந்திரநாத்- தமிழக அரசு இந்த தீர்ப்பை ஏற்க வேண்டும். புதிய ரேங்க் பட்டியலை தயாரிக்க வேண்டும். மொழியாக்கத்தில் நிபுணத்துவம் கொண்டவர்களை கொண்டு வினா தயாரிக்க வேண்டும். இதற்காக தமிழக அரசின் உதவியை கூட கேட்கலாம்.
கல்வியாளர், நெடுஞ்செழியன்: நீட் தேர்வு நடத்தும்போதே தமிழக மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை. தவறாக வினாத்தாளை கொடுத்துள்ளது தேர்வை ரத்து செய்ய ஏற்ற பிரச்சினை. எனவே கருணை மதிப்பெண் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே, கவுன்சலிங் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கவுன்சலிங் நடத்த வேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. தாமதிக்கப்பட்டது என்றபோதிலும், தமிழக மாணவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வழக்கு தொடர்ந்த ரங்கராஜன் எம்.பி. கூறுகையில், தமிழ் மக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றியாக இந்த தீர்ப்பை பார்க்கிறேன். வெற்றி குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது என்பது பெற்றோருக்கு கிடைத்த நிம்மதி. நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. நீ்ட் தேர்வை உருவாக்கியது தவறான கான்செப்ட். ஆங்கிலமும் தெரியாமல், தமிழும் தெரியாதவர்கள்தான் இதுபோன்ற கேள்வி தாளை தயாரித்திருக்க முடியும். இதற்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications