மணப்பாறை அருகே விபத்தில் 3 பேர் பலி– 17க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மணப்பாறை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வேலூர் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் மணப்பாறை பக்கம் உள்ள மேட்டுக்கடையை அடுத்த அனந்தனூருக்கு புறப்பட்டு வந்தனர்.
அனந்தனூரில் உறவினர் ஒருவர் இறந்து போனதை துக்கம் விசாரிப்பதற்காக புறப்பட்டு சென்றனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. சித்தப்பட்டி என்ற இடத்தில் வந்த போது ரோடு ஓரத்தில் உள்ள பள்ளத்தில் திடீரென வேன் கவிழ்ந்தது.
வேனில் பயணம் செய்த அழகம்மாள் , பெருமாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். மேலும் படுகாயம் அடைந்த 17க்கும் மேற்பட்டவர்களை அந்த பகுதியை சேர்ந்த சிலர் மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வரும் வழியிலேயே தைலம்மை பரிதாபமாக இறந்து போனார். பிச்சையம்மாள், பாப்பாத்தி, கனகு உள்பட மற்றவர்கள் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்கள் உடலை கைபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்ததற்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகிறார்கள். துக்கம் விசாரிக்க சென்ற போது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் துக்க வீட்டை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications