மம்மி மம்மி நாந்தான் தட்டினேன்... பாஜக, காங்கிரஸை வைத்து பொங்கல் வைக்கும் பேஸ்புக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி தேர்தல் முடிந்த கையோடு ஆம் ஆத்மியின் வெற்றி மட்டுமல்லாமல் தோல்வியடைந்த கட்சிகளைக் கலாய்க்கும் வேலையில் பேஸ்புக்கில் போட்டோ போட்டு கலாய்ப்போர் சங்கங்களும் களத்தில் சலங்கை கட்டிக் கொண்டு குதித்துவிட்டன.

விதவிதமாக, ரகரகமாக, தலைவர்களையும், கார்ட்டூன்களையும் போட்டுத்தாக்கி லைக்குகளைக் குவித்து விட்டனர் பேஸ்புக் "ஃபன்"னர்கள்.

டெல்லியில் தேர்தல் முடிவால் வருகின்ற களிப்பை விடவும், இவர்களுடைய அக்கப்போரினைப் பார்த்தால் சிரித்து சிரித்து வருகின்ற வயிற்றுவலிதான் அதிகம்.

கேப்டன் அது காஜல் அகர்வால் இல்ல:

கேப்டன் அது காஜல் அகர்வால் இல்ல:

முதலாவதாக சிக்கி இருப்பவர் நம்முடைய தமிழ்நாட்டின் "கேப்டன்" அவர்கள்தான். தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள "காஜல் அகர்வால்" (அட அரவிந்த் கெஜ்ரிவால்தாங்கோவ்) அவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை சாரி... சாரி ஆழ்ந்த நன்றிகளை சொல்கிறார்.

ரூம் போட்டு யோசிங்கப்பா:

ரூம் போட்டு யோசிங்கப்பா:

அடுத்தது, படுதோல்வியில் சிக்கி துவண்டுள்ள பாஜக கட்சியின் பெரிய தலை நரேந்திர மோடியும், சின்னத் தலை அமித் ஷாவும்தான் மேற்படி சிக்கி சின்னாபின்னமானவர்கள். இரண்டு பேரும் ஒரு போட்டோவில் உட்கார்ந்து தீவிரமாக யோசிக்கிறார்கள். என்னவென்று தெரியுமா?... "விளக்குமாறு ஆம் ஆத்மியின் சின்னம்னு யாராவது ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதாப்பா?" என்றுதான்.

மகாத்மாவையே தேட வச்சுட்டாங்க:

இன்னொரு பேஸ்புக் வலைப்பதிவில் ஊடகவியலாளர் ஒருவர் மகாத்மா காந்தி மைக்ரோஸ்கோப் மூலமாக புத்தகம் ஒன்றை படிப்பதைப் போல புகைபடத்தை இட்டு கீழே "டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காந்திஜி காங்கிரஸாரின் வெற்றித் தொகுதிகளைத் தேடுகிறார்" என்று கலகலப்பாக பதிவு செய்துள்ளார்.

அப்டிதான் நல்லா தள்ளுங்க:

அப்டிதான் நல்லா தள்ளுங்க:

இன்னொருவர் பகிர்ந்துள்ள கார்ட்டூன் ஒன்றில் கையில் சூலத்துடன் அமித் ஷாவும், கூட்டும் துடைப்பத்துடன் மோடியும் இருக்க மொத்தமாக இருவரையும் துடைப்பத்தால் கூட்டித் தள்ளுகின்றது டெல்லி மக்களின் கரம்.

என்ன ஒரு வில்லத்தனம்?:

என்ன ஒரு வில்லத்தனம்?:

அடுத்தது நம்ம அரவிந்த் கெஜ்ரிவாலேதான்... கையில் துடைப்பத்துடன் இந்திய வரைபடத்தில் நிற்கும் கெஜ்ரி மேற்படி துடைப்பத்தால் டெல்லியின் மீதுள்ள தாமரைப் பூக்களை கூட்டித் தள்ளுகிறார். சிம்பாலிக்கா சொல்றாங்களாமாம்!

மம்மி மம்மி நாந்தான் தட்டினேன்:

மம்மி மம்மி நாந்தான் தட்டினேன்:

கடைசியா மாட்டினது நம்ம காங்கிரஸ்தான்... சோனியா அம்மணிக்கு திடீரென்று ஒரு சந்தேகம் வர அதை ராகுலிடம் கேட்கிறார் டிவியைப் பார்த்துக் கொண்டே. அதற்கு ராகுல் என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்களேன்!

கிரண் அழுவாதம்மா:

இன்னொரு முகப்புத்தக பதிவில் கேப்டன் அவர்கள் பிரபுவிடம் சொல்கிறார் இப்படி... "கிரண்ட்கிட்ட் அப்பவே சொன்னேன் "ஆம்பள்" மாதிரி படங்களில் சின்னசின்ன ரோலில் நடி..." மீதிக் கொடுமையை நீங்களே பாருங்க... கிரணுக்கும், கிரண் பேடிக்கும் என்னமா கனெக்‌ஷன் கொடுத்துருக்கார் அப்படினு.

உன் சட்டையா, என் சட்டையா?:

உன் சட்டையா, என் சட்டையா?:

இன்னொரு டுவிட்டர் கார்ட்டூனீலோ, மோடி ஒபாமாவின் இந்திய விசிட்டின் போது முழுவதுமாக நரேந்திர மோடி என்ற பெயர் பதித்த சட்டையை அணிந்திருந்ததைப் போலவே ஆம் ஆத்மி என்ற பெயர் பதித்த சட்டையை அணிந்துள்ளார் நம்ம கார்ட்டூன் அரவிந்த் கெஜ்ரிவால். கீழே இந்த சட்டை விலைமதிப்பற்றது என்ற வாசகம் வேறு.

நீங்க நடத்துங்க காசா, பணமா:

நீங்க நடத்துங்க காசா, பணமா:

மொத்தத்தில் டெல்லி தேர்தல் வெற்றி ஜெயித்த ஆம் ஆத்மி கட்சியினை விடவும், பேஸ்புக்கிலேயே குடித்தனம் நடத்துபவர்களுக்குத்தான் செம எனர்ஜியை தட்டி விட்டு லைக்குகளைக் குவிக்க உதவியுள்ளது என்பதை மறுக்கவே முடியாது! என்னமோ போங்கம்மா இப்டி பண்றீங்களேம்மா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+