முதல்வரையே மிரட்டியது அசாதாரண சூழல்.. ஆளுநரின் உடனடி நடவடிக்கை தேவை: ஸ்டாலின்
சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதல்வர் பன்னீர்செல்வத்தை, சசிகலா செயல்படவே விடவில்லை என்பது அவரது பேட்டி மூலம் தெரியவருகிறது. இதைத்தான் திமுக சார்பில் தொடர்ந்து கூறினோம். தமிழகத்திலுள்ள எல்லா தரப்பு மக்களுமே, அதிமுகவை சேர்ந்த தொண்டர்களும் இதைத்தான் சொன்னார்கள்.
இப்போது ஓ.பி.எஸ்பேட்டி நிரூபித்துள்ளது. அனைத்துமே இந்த ஆட்சியில் பெரிய மர்மமாக இருந்து கொண்டுள்ளது. முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளனர். ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த முதல்வருக்கே இந்த கதி ஏற்பட்டுள்ளது. மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இப்போதைக்கு தமிழகத்தில் அரசாங்கம் என்பதே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைய ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஆட்சி ஒன்று இப்போது தமிழகத்தில் அமைந்தாக வேண்டும். முதல்வரை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கி ஆளுநரிடம் வழங்கியுள்ளது ஒரு அசாதாரண சூழல்.
இன்னும் என்னென்ன மர்மங்கள் வெளிவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கூட மர்மமாக உள்ளது. அவர் ஏன் மரணமடைந்தார் என்பதும் மர்மமாக உள்ளது. ஓ.பி.எஸ் கூறியதை வைத்து பார்த்தால் மர்மங்கள் மிக அதிகமாக உள்ளது. முதல்வரின் செயலாளர்கள் திடீரென ராஜினாமா செய்வதும் மர்மமாக உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications