வருமான வரித்துறைக்கு எதிரான கருத்து.. ராம மோகன ராவ் மீது நடவடிக்கை பாயும்: பொன்.ராதாகிருஷ்ணன்
வருமானவரித் துறையின் நடவடிக்கையை கண்டித்து பேசிய (தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர்) ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை: வருமான வரித்துறை நடவடிக்கையை கண்டித்து பேசிய ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று நிருபர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் மேலும் கூறியதாவது: இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இவ்வாண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது உறுதி.

வருமானவரித் துறையின் நடவடிக்கையை கண்டித்து பேசிய (தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர்) ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சரிடம் விளக்கமாக கூறுவேன். மேலும் இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்குள் அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ராமமோகனராவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது, ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்பதை போல வெறும் பேச்சளவில்தான் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications