ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் தகவல் வரும்.. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை!
ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் தகவல் வரும் என எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்கான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கட்சி தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனுடனான சந்திப்புக்குப் பிறகு அவரது ஆதரவு எம்எல்ஏவான தங்கதமிழ்ச் செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயக்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் ஜெயக்குமார் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் தகவல் வரும் என்றும் அவர் கூறினார். கட்சி தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எந்த பிளவும் இல்லை, ஒரே அணியாகத்தான் உள்ளது என்றும் அவர் கூறினார். ஓபிஎஸ் போல் ஆட்சியை கவிழ்க்க முயல மாட்டோம் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.












Click it and Unblock the Notifications