‘தல’ அஜித்தின் 46வது பிறந்தாள்… அவர் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள்.. உங்களுக்காக: வீடியோ
திரைப்பட நடிகர் அஜித்தின் 46வது பிறந்த தினம் இன்று. அவர் வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுகளின் தொகுப்பு.. இதோ உங்களுக்காக…
சென்னை: இன்று தனது 46வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நடிகர் அஜித். அவரைப் பற்றிய சிறப்பு தொகுப்பு ஒன்இந்தியா நேயர்களுக்கு...
தமிழில் அஜித் அறிமுகமான முதல் திரைப்படம் அமராவதி. வசந்த் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. அஜித் நடித்த படங்களில் சூப்பர் ஹிட் வெற்றிப் பெற்றப் படம் காதல் கோட்டை.
இளையத் தளபதி என்று ரசிர்களால் அழைக்கப்படுகின்ற நடிகர் விஜய் உடன் அஜித் நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே.

காதல்
சரண் இயக்கிய அமர்க்களம் திரைப்படத்தின் ஷூட்டிங் போதுதான் ஷாலினியுடன் அஜித்திற்கு காதல் மலர்ந்தது. பின்னர், இரு வீட்டார் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றது. அஜித்தின் திருமண நாளும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினமும் ஒரே நாளாகும்.

அல்டிமேட் ஸ்டார்
தற்போது அறிமுகமாகும் நடிகர்கள் கூட விதவிதமான பட்டங்களுடன் வலம் வரும் வேளையில் தனது பெயருக்கு முன்னாள் இருந்த அல்டிமேட் ஸ்டார் என்றப் பட்டத்தை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டவர் அஜித். அதில் இருந்து ரசிகர்கள் யாரும் அந்தப் பெயரை போட்டதில்லை.

‘தல’
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் படம் அஜித் நடித்த தீனா. இந்தப் படத்தில் இருந்துதான் அஜித்திற்கு ‘தல' என்று அடைமொழி உருவானது. பாலாவின் நான் கடவுள், ஏர்.ஆர். முருகதாஸின் கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்னர் அதில் இருந்து விலகியவர் அஜித்.

நெகடிவ் ரோல்
மனதில் பட்டதை அப்படியே பொதுமேடைகளில் பேசிவிடுவார் அஜித். திரையுலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ரஜினிக்கு அடுத்து இருப்பவர் அஜித்தான். அஜித்திற்கு ரஜினியைப் போன்றே நெகட்டிவ் ரோல் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதற்கு பில்லா, மங்காத்தா போன்ற படங்கள் உதாரணம்.

பைலட் லைசென்ஸ்
அஜித் ஒரு பைக் மற்றும் கார் பிரியர். விமான பைலட் லைசென்ஸ் வைத்துள்ள ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டும்தான். அவர் ஒரு தீவிரமான சாய்பாபா பக்தர். அரசியலில் இறங்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர் அஜித். அவர் அடிக்கடி செல்லும் கோயில் திருப்பதி.

பிரியாணி பிரியர்
அவர் ஒரு புத்தகப் பிரியராக இருப்பதால் வீட்டிலேயே ஒரு சிறிய நூலகமே வைத்துள்ளார். அவருக்கு பிடித்த உணவு சிக்கன் பிரியாணி. அவருக்கு பிடித்த மற்றொரு விஷயம் போட்டோ கிராபி. அவர் தனது படத்தின் வெற்றித் தோல்வி குறித்து கவலைப்படமாட்டார். வெற்றியோ தோல்வியோ இனி ரசிகர்கள் தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிடுவார்.

பொது நிகழ்வு
கடந்த சில வருடங்களாக தனது படத்தின் பிரமோஷனுக்கு வரமாட்டேன் என்று கண்டிஷன் போட்டுத்தான் ஒப்பந்தம் ஆகிறார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பெரும்பாலும் தவிர்த்து விடுவார். ஒருவேளை கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் நிகழ்ச்சி முடியும் வரை இருப்பார்.

அம்மா பாசம்
இந்தி நடிகர் ஷாருக்கானுடன் அஜித் இணைந்து நடித்த ஒரே படம் அசோகா. அதே போல் நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து நடித்தப்படம் இங்கிலீஷ் விங்கிலிஷ். அஜித்திற்கு அம்மா பாசம் மிக அதிகம். அவர் நடிகராக மட்டுமல்ல. நல்ல மனிதராகவும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர்.

நடிகர் விஜய்
அஜித்திடம் எனக்கு பிடித்தது அவரது தன்னம்பிக்கைதான். என்னுடைய சொந்த வாழ்க்கையில் அவருக்கு மிகப் பெரிய பங்குண்டு. நான் தம்பி என்றால் அவர் அண்ணன் என்று நடிகர் விஜய், ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications