வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக ஆஜரான சரத்குமார்.. வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை: மூன்றாவது முறையாக வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தாம் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதியும், அவரது மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் நிறுவனத்தில் கடந்த 13ம் தேதியும் வரமான வரி சோதனை நடைபெற்றது. ஏறத்தாழ 15 மணி நேரம் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.

ராதிகா சரத்குமார் ரூ. 5 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டநிலையில் அதனை செலுத்த ராதிகா ஒப்பு கொண்டார். மேலும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2முறை சரத்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரி அலுவலகத்தில் சரத்குமார் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இன்றைய விசாரணையின் போது வரி செலுத்தியதற்கான ஆவணங்களையும் சமர்பித்தார். மேலும் செலுத்த வேண்டிய வரி பாக்கியை விரைவில் செலுத்துவதாகவும் சரத்குமார் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சரத்குமாரிடம் விசாரணை முடிந்ததது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி அதிமுக துணை பொதுச் செயலளார் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications