நடிகர் தாடி பாலாஜி தலைமறைவு.... வலைபோட்டு தேடும் போலீஸ்: வீடியோ
நடிகர் தாடி பாலாஜி தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வரும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை: நடிகர் தாடி பாலாஜியை போலீசார் தேடி வரும் நிலையில், முன் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்காது என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் பாலாஜி. இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டையில், அவரது மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில், 'பாலாஜி என் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டுகிறார், தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்' என புகார் கொடுத்தார்.

ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்தார். அதனையடுத்து தாடி பாலாஜி மீது பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் அவரை தேடி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள தாடி பாலாஜி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications