பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் சிறைவைத்த நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது!
பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் சிறைவைத்ததாக நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். பேஸ்புக்கில் பழகிய பெண்ணை, வீட்டுக்கு வரவழைத்து கட்டாயப்படுத்தி, மிரட்டி அடைத்து வைத்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி, பல சர்ச்சைகளில் ஏற்கனவே சிக்கியுள்ளார். பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக தற்போது அவருடைய மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த, 32 வயதாகும் உதயா என்ற பெண், விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் மிதுன் சீனிசனுடன் பழகி உள்ளார். உதயாவை திருமணம் செய்ய விரும்புவதாக மிதுன் கூறியுள்ளார். இதனிடையே மிதுன் போதைப்பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்ததால் திருமணம் செய்யும் முடிவை உதயா மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே இது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனிடையில், உதயாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி மிதுன் அழைத்துள்ளார். அதன்படி மகனுடன் உதயா சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உதயா மற்றும் அவருடைய மகனை, வீட்டின் ஒரு அறையில் மிதுன் அடைத்து வைத்துள்ளார். போதையில் அவர் தூங்கியபோது, நடிகை புவனேஸ்வரி, அறைக்கதவை திறந்து விட்டு, உதயாவை அனுப்பி வைத்துள்ளார். உதயா கொடுத்த புகாரின் அடிப்படையில் மிதுன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை புவனேஸ்வரிக்கு, தற்போது இது மிகப் பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications