அரசியல் களத்தில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் கமல்.. அமைச்சர் செல்லூர் ராஜூ தாக்கு
அரசியல் களத்தில் நடிகர் கமல்ஹாசன் நகைச்சுவை நடிகராகிவிட்டார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசியல் களத்தில் நடிகர் கமல்ஹாசன் நகைச்சுவை நடிகராகிவிட்டார் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்புக்காகவே திமுக - காங்கிரஸ் கட்சிகள் காவிரி விவகாரத்தில் பொய்யாக நடிக்கின்றன என குற்றம்சாட்டினார்.
சினிமாவில் உலக நாயகனாக நடித்த நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் நகைச்சுவை நடிகராகிவிட்டார் என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக முதல்வராகி விடுவோம் என்ற கமல்ஹாசனின் கனவு பலிக்காது என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications