ரஜினிகாந்த் படங்களில் பிஸி.. கமல்ஹாசன் கட்சி பணிகளில் விறுவிறுப்பு.. தொண்டர்கள் குஷி!
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஆள் சேர்ப்பது குறித்து, நடிகர் கமல்ஹாசன் இன்று நிர்வாகிகளுடன் ஆழ்வார்பேட்டையில் ஆலோசனை நடத்தினார்.
கடந்த புதன்கிழமை மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கியதாக அறிவித்தார் கமல்ஹாசன். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்றார்.
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சென்ற கமல்ஹாசன், அங்கே முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் அவரது குடும்பத்தாரிடம் ஆசி பெற்றார்.

ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகளுடன் இன்று கமல் ஆலோசனை நடத்தி வருகிறார். மக்கள் நீதி மய்யத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் படங்கள்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து சினிமா படங்களில் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகிக்கொண்டுள்ளது. இந்த நிலையில், கட்சியை வலுப்படுத்தி ஆள் சேர்ப்பை அதிகரிக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்தடுத்து படங்கள்
ரஜினிகாந்த் புதிதாக, கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து, எந்திரன் 2வது பாகம், காலா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இதனால் ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பு வெளியாகும் தேதி தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

கட்சியினர் குஷி
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கட்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளார். முடிந்த அளவுக்கு கட்சிக்கு ஆள் சேர்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது கமல்ஹாசன் திட்டமாக இருக்கும் என்று தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications